சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் நடந்த சோகம் !!
ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா!!!
ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சி எஸ் கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென்று இந்தியா திரும்பினார் . இதற்கான காரணத்தை அளித்த அணி நிர்வாகம் ரெய்னா தனது சொந்த விவகாரம் தொடர்பாக இந்தியா சென்றுல்லார் என்று தெரிவித்துள்ளது .
ரெய்னா வின் மாமா மரணம்
சற்று முன் கிடைத்த செய்திகளின் படி ரெய்னா தனது மாமா அசோக் குமார் மரணத்திற்காக சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
காவல் துறையின் அறிக்கை படி அசோக் குமாரும் (58) மனைவி ஆஷா தேவியும் (55) வீட்டின் மாடியில் படுத்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவத்தின் போது படுகாயம் அடைந்த அசோக் குமாரும் அவரது மனைவியும் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டனர் . சிகிச்சை பலனின்றி ரெய்னா வின் மாமா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆஷா தேவி உயிருக்கு போராடி வருகிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர்.இந்த சம்பவத்தின் போது கூர்மையான அயுதங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment